'இந்தியா' கூட்டணி தோல்வி பயத்தில் உளறுகிறது - எல்.முருகன் விமர்சனம்
‘இந்தியா’ கூட்டணி தோல்வி பயத்தில் உளறிக் கொண்டிருக்கிறது என எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
சென்னை,
தமிழர்களை அவமதிக்கும் வகையில் பிரதமர் மோடி கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனிடையே தமிழர்களிடம் பிரதமர் மோடி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் சென்னையில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தின் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார்.
இந்நிலையில் 'இந்தியா' கூட்டணி தோல்வி பயத்தில் உளறிக் கொண்டிருப்பதாக நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"ஒடிசாவில் உள்ள கோவிலின் சாவியை காணவில்லை என்றும், ஒடிசாவை நிர்வகிக்கும் அதிகாரியை குறித்தும் மட்டுமே பிரதமர் மோடி பேசினார். தமிழர்களைப் பற்றி அவர் எதுவும் கூறவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறான தகவலை மக்களிடம் திணிக்க வேண்டாம். 'இந்தியா' கூட்டணி தோல்வி பயத்தில் உளறிக் கொண்டிருக்கிறது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.