சுதந்திர தின விழா: பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை

75- வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.இதை முன்னிட்டு பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.

Update: 2022-08-14 15:10 GMT

பொள்ளாச்சி

75- வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.இதை முன்னிட்டு பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.

வாகன சோதனை தீவிரம்

75-வது சுதந்திர தின விழா 15-ந்தேதி (திங்கட்கிழமை) இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதேபோல் கோவை மாவட்டம் ஆனைமலை, பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கோலாகலமாக நடக்கிறது. விழாவையொட்டி அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் பொள்ளாச்சி, ஆனைமலை, சுல்தான்பேட்டை, கோட்டூர், ஆழியாறு, அம்பராம்பாளையம், நா.மூ.சுங்கம் பகுதியில் நேற்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகரின் முக்கிய பகுதிகளான பாலக்காடு ரோடு, கோவை ரோடு, புதிய திட்ட சாலை உள்பட பல இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு பணி

மேலும், பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு செல்லும் முக்கிய வழித்தடங்களான வளந்தாயமரம், ராமபட்டிணம், நடுப்புணி, செமனாம்பதி, மீனாட்சிபுரம், கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் வாகனங்களை நிறுத்தி தீவிர வாகன சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில், போலீசார் மட்டுமின்றி ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர். இது தவிர, சுற்றுலா பகுதிகளான டாப்சிலிப், ஆழியார், கவியருவி (குரங்கு நீர்வீழ்ச்சி) உள்ளிட்ட பகுதிகளுக்கு வருவோரின் வாகனங்களை வன எல்லை பகுதியில் வைத்து சோதனைக்கு பிறகே போலீசார் அனுமதித்தனர். இன்றும் (திங்கட்கிழமை) வாகன சோதனை நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்