காங்கிரஸ் சார்பில் சுதந்திர தின விழா
காங்கிரஸ் சார்பில் சுதந்திர தின விழா நடந்தது.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
நகர காங்கிரஸ் சார்பில் சோளிங்கர் போஸ்ட் ஆபீஸ் வீதியில் இருக்கும் காந்தி சிலைக்கும், பஸ் நிலையம் அருகில் உள்ள காமராஜ் சிலைக்கும் நகர தலைவர் கோபால் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
இதில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
சோளிங்கர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமையில் தேசிய கொடியேற்றப்பட்டது.