மனோ கல்லூரியில் சுதந்திர தினவிழா:போட்டியில் வெற்றிபெற்றமாணவ, மாணவியருக்கு பரிசு

மனோ கல்லூரியில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.;

Update:2023-08-17 00:15 IST

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள நாகம்பட்டி மனோ கல்லூரியில் நடந்த சுதந்திர தின விழாவுக்கு கல்லூரி முதல்வர் பீட்டர்அமலதாஸ் தலைமை தாங்கி, தேசியக் கொடியேற்றி சுதந்திற்குப் பின் இந்தியா என்னும் தலைப்பில் பேசினார். மாணவ மாணவியருக்கு கபடி, கைஎறிபந்து மற்றும் கலை இலக்கிய போட்டிகள் நடந்தது. பேட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை முதல்வர் வழங்கினார். முன்னதாக தமிழ்த்துறை பேராசிரியர் பவானி வரவேற்று பேசினார். உடற்கல்வி இயக்குனர் கணேசன் நன்றி கூறினார். தமிழ்த்துறைத் தலைவர் சேதுராமன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்