சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

திருப்பத்தூர், கந்திலியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-08-15 19:08 GMT

கந்திலி ஒன்றியம் மாம்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கேஎ.ஸ்.ஏ. மோகன்ராஜ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் வி.சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் தொகுதி எ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரக்கன்றுகள் நட்டார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு தலைவர் திருமதி, அவைத் தலைவர் ராஜா, துணை செயலாளர் கே.சீனிவாசன், ஆர்.தசரதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் நகராட்சியில் நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேசன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு வரவேற்றார். நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு தலைவர் விஜியா அருணாச்சலம் தேசிய கொடி ஏற்றி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருணாநிதி, சங்கர் உள்பட ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்

கந்திலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு தலைவர் திருமதி திருமுருகன் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.எம்.நேரு, விநாயகம் உள்பட ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் மாதவி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்