கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளும் வேகமாக நிரம்புகிறது. கனமழையால் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து மொத்தம் 17,688 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து காலையில் 11,250 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 15,000 கனஅடியாக அதிகரிக்கபட்டுள்ளது.
இந்த தண்ணீர் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்பட்ட தண்ணீர் இன்று தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வந்து சேருமென எதிர்பார்க்கப்படுகிறது.