மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : 1.25 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்

கர்நாடகா மாநிலத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது

Update: 2022-09-07 11:37 GMT

ஈரோடு,

கர்நாடகா மாநிலத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 90 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று 1.25 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் 4-வது முறையாக மீண்டும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஈரோடு மாவட்ட காவிரி ஆற்றுக் கரையோர பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் பவானி புதிய பஸ் நிலையம் கந்தன் நகர், காவிரி நகர், பசவேஸ்வரர் தெரு, மீனவர் தெரு, பழைய பாலம், கீரைக்கார வீதி, பாலக்கரை, பழைய பஸ் நிலையம் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் இன்று மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மக்கள் மீண்டும் அருகே உள்ள முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்