கறிக்கோழி விலை உயர்வு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை மற்றும் மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கறிக்கோழி விலை உயர்ந்தது
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை மற்றும் மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கறிக்கோழி விலை உயர்ந்தது. கோழிக்கறி உயிருடன் 1 கிலோ ரூ.130-க்கும், கறிக்கோழி விலை கிலோ ரூ.250-க்கும் விற்கப்பட்டது. முட்டை ஒன்று ரூ.5-க்கு விற்பனையானது. இதேபோல, நகரின் பல இடங்களில் நாட்டுக்கோழி விற்கப்பட்டது. ஒரு நாட்டுக்கோழி ரூ.500 முதல் ரூ.800 வரை விற்கப்பட்டது. ஆட்டின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.