விஷம் அருந்தி தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

மதுரை மாவட்டத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-04-17 20:39 GMT

மதுரை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்தநிலையில் மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எழுப்பிய கேள்விக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் பதில் அளித்துள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு 2,380 பேரும், 2022-ம் ஆண்டு 2,550 பேர் என கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 4 ஆயிரத்து 930 பேர் விஷ மருந்து அருந்திய நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 2021-ம் ஆண்டு 180 பேர், 2022-ம் ஆண்டு 207 பேர் என 387 பேர் உயிரிழந்துள்ளனர். இதே காலகட்டத்தில் அரசு மருத்துவ குழுவினரின் விரைவான சிகிச்சை முறையின் காரணமாக 4 ஆயிரத்து 543 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். மேலும், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் விஷம் அருந்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களுக்கு பிரத்தியேக பிரிவு செயல்படுகிறது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்