சேலம்- விருத்தாசலம் பயணிகள் ரெயிலின் வேகம் அதிகரிப்பு
சேலம்- விருத்தாசலம் பயணிகள் ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
சூரமங்கலம்:
சேலம் ரெயில்வே கோட்டம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம்- விருத்தாசலம் இடையே இரு மார்க்கத்திலும் பயணிகள் ெரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் இந்த ெரயிலின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. இதனால் பயண நேரம் 15 நிமிடம் குறையும்.
அதன்படி விருத்தாசலம்- சேலம் பயணிகள் ெரயில் (06121) விருத்தாசலத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு காலை 9.05 மணிக்கு சேலம் வந்தடையும்.
சேலம்- விருத்தாசலம் பயணிகள் ெரயில் (06122) சேலத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு விருத்தாசலம் சென்றடையும். இதேபோல் சேலம்- விருத்தாசலம் பயணிகள் ெரயில் (06896) சேலத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு விருத்தாசலம் சென்றடையும். விருத்தாசலம்- சேலம் பயணிகள் ரெயில் (06895) விருத்தாசலத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு மாலை 5.05 மணிக்கு சேலம் வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.