கிணத்துக்கடவில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரிப்பு
கிணத்துக்கடவில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரிப்பு
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு தாலுகா அரசம்பாளையம் அருகே காரச்சேரியை சேர்ந்தவர் லோகநாதன். இவர் சம்பவத்தன்று குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இதை பயன்படுத்திக்கொண்ட 3 பேர் கும்பல், கதவை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடிக்க முயன்றது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டனர். உடனே அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர். இதேபோன்று அரசம்பாளையம்பிரிவு, ஏழுர்பிரிவு, ெரயில் நிலைய சாலை மேம்பாலம் ஆகிய 3 இடங்களில் பொதுமக்களிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி பணம், செல்போனை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர். இது தவிர கிணத்துக்கடவு பஸ் நிலையம் அருகே நடந்து சென்ற அரசு பஸ் கண்டக்டரிடம் செல்போனை பறிப்பு, கொண்டம்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு முயற்சி, முள்ளுப்பாடி ெரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நடந்து வரும் பெண்களிடம் செல்போன் பறிப்பு ஆகிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.
இவ்வாறு கிணத்துக்கடவு பகுதியில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களால், பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கிணத்துக்கடவில் போதிய போலீசார் பணியில் இல்லாததால், குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளனர்.