வத்தல் சாகுபடி அதிகரிப்பால் விலை குறைய வாய்ப்பு

தென் மாநிலங்களில் வத்தல் சாகுபடி அதிகரிப்பால் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

Update: 2023-05-17 19:37 GMT

தென் மாநிலங்களில் வத்தல் சாகுபடி அதிகரிப்பால் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

வத்தல் சாகுபடி

இதுபற்றி தெரிவித்ததாவது:-

கடந்த ஆண்டு வத்தல் சாகுபடியில் பல்வேறு காரணங்களால் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நடப்பு ஆண்டில் 35 சதவீதம் வத்தல் சாகுபடி உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களில் வத்தல் சாகுபடி வெகுவாக அதிகரித்துள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடந்த ஆண்டு தலா 40 கிலோ கொண்ட 2 கோடி வத்தல் மூடைகள் வணிகச்சந்தைக்கு வந்த நிலையில் நடப்பு ஆண்டில் 2.7 கோடி மூடைகள் வணிக சந்தைக்கு வந்துள்ளது. மேலும் ஆந்திராவில் ஒரு மாதம் வணிகச்சந்தை மூடப்பட்ட நிலையிலும் வத்தல்வரத்தில் குறைவில்லை.

விலை குறைய வாய்ப்பு

கடந்த மார்ச் மாதம் வத்தல் விலை கிலோ ரூ.260 முதல் ரூ.280 வரை இருந்த நிலையில் தற்போது கிலோ ரூ.180 முதல் ரூ.240ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து வத்தல் சாகுபடி நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் வத்தல் சாகுபடி 10 முதல் 15 சதவீதம் நடப்பாண்டில் உயர வாய்ப்புள்ள நிலையில் வத்தல் விலை மேலும் உயர்வதற்கு வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் குளிர்சாதனக்கிட்டங்கிகளில் வத்தல் இருப்பு வைக்கும் அளவு அதிகரித்து உள்ளது. வத்தல் விலை குறைய வாய்ப்புள்ளதாக கருதி வத்தல் சார்ந்த உணவு பொருள் தயாரிப்பாளர்கள் வத்தல் கொள்முதலை தாமதப்படுத்தும் நிலை உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்