மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2022-10-11 21:16 GMT

மேட்டூர், 

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை டெல்டா மாவட்டங்களிலும், கால்வாய் பாசனம் மூலம் பயன்பெறும் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர், நேற்று காலையில் வினாடிக்கு 750 கனஅடியாக குறைக்கப்பட்டது. மாலையில் மேலும் குறைக்கப்பட்டு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 644 கனஅடி வீதம் வந்த தண்ணீர், நேற்று மாலை வினாடிக்கு 33 ஆயிரத்து 420 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.74 அடியாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்