மின் கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்

மின் கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-09-13 17:36 GMT


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாவட்ட செயலாளர் மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மருதவாணன், உதயகுமார், கருப்பையன், சுப்புராயன், திருவரசு, ரவிச்சந்திரன், ராஜேஷ்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மின் கட்டண உயர்வு

கூட்டத்தில், தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் ரூ.55 முதல் ரூ.1130 வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு 6 சதவீதம் என்ற அளIncrease in electricity chargesவில் மின் கட்டண உயர்வு இருக்கும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்துகிற நடைமுறை ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வையும், சிறு, குறு தொழில்கள், சிறிய நடுத்தர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதை தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அரிசி, கோதுமை உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களின் மீதும் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளதால் வரலாறு காணாத அளவில் விலைவாசி யர்ந்துள்ளது. இதை கண்டிக்கும் தமிழக அரசு, தன் பங்கிற்கு மின் கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்ற செயலாகும்.

போராட்டம்

ஆகவே ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களையும், சிறு, குறு தொழில்களையும் கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெறாவிட்டால் அனைத்து பகுதி மக்களையும் ஒன்று திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்