ஒப்பந்தக்காரர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை
தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தக்காரர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையை தலைமை இடமாகக் கொண்டு தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை முதன்மை ஒப்பந்த நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளரான செய்யாத்துரையின் வீடு மற்றும் அலுவலகம் மதுரை சாலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென மதுரையில் இருந்து வந்த 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் செய்யாத்துரை மற்றும் அவரது மகன்களான கருப்பசாமி, நாகராஜன், ஈஸ்வரன் மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகம் என 5 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். காலை 12 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் செய்யாத்துரை என கூறப்படுகிறது.