கோவையில் திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

மீனா ஜெயக்குமார் அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினர் எனக்கூறப்படுகிறது. இவரது கணவர் ஜெயக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

Update: 2023-11-03 05:58 GMT

கோவை,

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட நகரங்களில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான சுமார் 80 இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கோவையில் ராமநாதபுரம்- நஞ்சுண்டாபுரம் சாலையில் அமைந்துள்ள திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மூன்று கார்களில் வந்துள்ள அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சி.ஆர்.பி.எப் வீரர்களுடன் இணைந்து அங்கு தமிழக காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீனா ஜெயக்குமார், அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினர் எனக்கூறப்படுகிறது. மீனா ஜெயக்குமாரின் கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அப்பாசாமி குடியிருப்பில் அதன் சி.இ.ஓ. கிருஷ்ணன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. காசா கிராண்ட் நிறுவனம் தொடர்பாக அடையாறு தலைமை அலுவலகம், நிர்வாகிகள் வீடு என 2 இடங்களில் சோதனை நீடித்து வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்