தொடர் மழை: திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தொடர் மழை காரணமாக திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-10-16 02:34 GMT

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. அதன்படி திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தொடர் மழை காரணமாக திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (திங்கட்கிழமை) ஒருநாள் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்