உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகைமாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்

உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஊக்கத்தொகை வழங்கினார்.

Update: 2023-07-05 18:45 GMT

விழுப்புரம் மாவட்ட காவல்துறை மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் பிள்ளைகள் உயர்கல்வி படிக்க அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் கலந்துகொண்டு, காவலர் சேமநல நிதியில் இருந்து 2021-2022-ம் ஆண்டுக்கான கல்வி ஊக்கத்தொகையாக ரூ.5 லட்சத்து 66 ஆயிரத்து 851-க்கான காசோலையை 32 மாணவ- மாணவிகளுக்கு வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின்போது தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதன் மற்றும் காவல்துறையினர், அமைச்சுப்பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்