புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்புவிழா

விளாத்திகுளம் யூனியன் பள்ளியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்புவிழா நடந்தது.;

Update:2023-02-06 00:15 IST

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் யூனியன் தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன் ராஜ், நகர தி.மு.க செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் தமிழரசி, ஜெயராணி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்க நிதியுடன் விளாத்திகுளம் சத்திய சாயி சேவா சமிதி, கிராம மேம்பாட்டு திட்டம், மரங்கள் மக்கள் இயக்கம் மற்றும் ரம்யா தட்டச்சு பயிற்சி பள்ளி ஆகியவை இணைந்து இலவச கண் மருத்துவ முகாமை யூனியன் தொடக்கப்பள்ளியில் நடந்தின. முகாமை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். மாநில அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன் ராஜ், டாக்டர் அனிதா மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், விளாத்திகுளம் பஸ்நிலையம் முன்பு ஓ.பி ராமசாமி ரெட்டியார் பிறந்த நாளை முன்னிட்டு 5-ம்ஆண்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. விளாத்திகுளம் முதல் எட்டயபுரம் சாலையில் நடைபெற்ற ஆண்களுக்கான போட்டியை விளாத்திகுளம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

பெண்களுக்கான போட்டியை விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அயன்ராஜ், விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரசோலை ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான போட்டியில் வேல்முருகனும், இரண்டாம் பரிசை அஜித்குமார், மூன்றாம் பரிசை பாலசுப்பிரமணியனும் பெற்றனர்.

பெண்களுக்கான போட்டியில் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கோகிலா முதல் பரிசை தட்டிச் சென்றார். இரண்டாம் பரிசை புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி சங்கீதா, மூன்றாம் பரிசை விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ரம்யாவும் பெற்றனர். பத்து வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் முதல் பரிசை கவுதம், இரண்டாவது பரிசை உதய தர்ஷினி, மூன்றாவது பரிசை கணிஷ்குமார் ஆகியோர் பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்