சேவை சுவர் திறப்பு விழா
குத்தாலம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சேவை சுவர் திறப்பு விழா நடந்தது
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சிகளின் ஆணையர் அறிவுறுத்தலின்பேரில் பேரூராட்சி பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் கடைகளில் பயன்படுத்தாத பொருட்களை பிறர் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக பழைய துணிகள், புத்தகங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் சேவை சுவர் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் குத்தாலம் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் கலந்துகொண்டு சேவை சுவரை திறந்து வைத்து பேசினார். அப்போது பொதுமக்கள் தங்களுக்கு பயன்படாத மேற்கண்ட பொருட்களை சேவை சுவரில் வைத்து உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டார். அப்போது பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன், செயல் அலுவலர் ரஞ்சித் உள்ளிட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.