குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மொழிகள் ஆய்வகம் திறப்பு
தமிழகத்தில் முதல்முறையாக குத்தாலம் அரசு மாதிரி மே ல்நிலைப்பள்ளியில் மொழிகள் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில்மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டனர்.
குத்தாலம்:
தமிழகத்தில் முதல்முறையாக குத்தாலம் அரசு மாதிரி மே ல்நிலைப்பள்ளியில் மொழிகள் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில்மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் முதல் முறையாக மொழிகள் ஆய்வகம்
தமிழகத்தில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள அரசு மாதிரிமே நிலைப்பள்ளியில் நேற்று மொழிகள் ஆய்வகம் திறப்பு விழா நடை பெற்றது. இந்த ஆய்வகத்தை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகே ஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தனர்.
மாணவர்களிடம் கேட்டறிந்தார்
அப்போது ஆய்வக வழிமுறைகள் குறித்து மாணவர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டு அறிந்தார். நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வரவேற்றார். இதில் அமைச்சர் மெய்யநாதன், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா, தி.மு.க. மாநில உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம், மாநில கொள்கை பரப்பு துணைசெயலாளர் குத்தாலம் க.அன்பழகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விஜயா ராஜேந்திரன், குத்தாலம் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன், துணைத்தலைவர் சம்சுதீன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா நன்றி கூறினார்.