தோட்டக்கலை தகவல் மைய கட்டிடம் திறப்பு விழா

நாகையில் தோட்டக்கலை தகவல் மைய கட்டிடம் திறப்பு விழா நடந்தது.

Update: 2022-09-06 17:07 GMT

வெளிப்பாளையம்:

நாகையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சி மைய கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். பின்னர் அந்த கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். இதி்ல் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் உடனிருந்தனர்.இதில் முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, நகராட்சி தலைவர் மாரிமுத்து, வேளாண்மை இணை இயக்குனர் ஜாக்குலா அகண்டராவ், தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் கண்ணன், அலுவலக கண்காணிப்பாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்