சுகாதார வளாக கட்டிடம் திறப்பு

தென்காசியில் சுகாதார வளாக கட்டிடம் திறப்புவிழா நடந்தது.

Update: 2023-03-29 18:45 GMT

தென்காசி மேல ரத வீதியில் ரூ.1 லட்சம் செலவில் சுகாதார வளாகம் கட்டிடம்) பயோ டாய்லெட் அமைக்கப்பட்டுள்ளது. இது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நகர்மன்ற தலைவர் சாதிரின் சொந்த நிதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிட திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் சாதிர் இதனை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நகரமன்ற துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா, நகரசபை ஆணையாளர் பாரிஜான், தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்