நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா

நெல்லை அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

Update: 2023-03-09 19:28 GMT

இட்டமொழி:

நெல்லை அருகே உள்ள தருவை கிராமத்தில் விவசாயத்தை மேம்படுத்தவும், விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் தமிழக அரசு சார்பில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழாவும், நெல் கொள்முதல் பணி தொடக்க நிகழ்ச்சியும் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். அப்போது அங்கு பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையை சரிசெய்யும் வகையில் ஆழ்குழாய்கிணறு அமைத்து தரும்படியும், கழிவுநீர் ஓடையை சரிசெய்து தரும்படியும் கோரிக்கை விடுத்தனர். ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உடனடியாக நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார். விழாவில் காங்கிரஸ் வட்டார தலைவர் கணேசன், மாவட்ட துணைத்தலைவர் செல்லப்பாண்டி, மாவட்ட பொதுச்செயலாளர் நம்பித்துரை, தருவை ஊராட்சி மன்றத்தலைவர் கவுரி கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் ராமகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுக ராமச்சந்திரன், நிர்வாகிகள் தனபால், செல்வகுமார், சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்