சமூக நல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி
கல்லிடைக்குறிச்சியில் சமூக நல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
அம்பை:
கல்லிடைக்குறிச்சி அசன்சேக் டிரஸ்ட் சார்பில், நல உதவிகள் வழங்குதல் மற்றும் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது. ஜமாத் தலைவர் அப்துல் மஜீத் தலைமை தாங்கினார். டிரஸ்ட் நிறுவனர் அசன்சேக் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், செய்யது குரூப் ஆப் கம்பெனி சேர்மன் பத்ஹூர் ரப்பானி, பேரூராட்சி துணைத்தலைவர் இசக்கிப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு நல உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் செல்வ சூடாமணி, ஒன்றிய செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், முத்துப்பாண்டி, அம்பை யூனியன் தலைவர் பரணி சேகர், மாவட்ட துணைச்செயலாளர் மாஞ்சோலை மைக்கேல், மாவட்ட பிரதிநிதிகள் சீவலமுத்து, பீர்முகம்மது, பூதத்தான், அனிபா, பேரூர் தி.மு.க. அக்பர், முருகாண்டி, தைக்கா தெரு ஜமாத் தலைவர் நாகூர் மைதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.