கூட்டுறவு விற்பனை சங்க திறப்பு விழா

ஒட்டன்சத்திரத்தில் கூட்டுறவு விற்பனை சங்கத்தை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார்.

Update: 2023-01-22 18:45 GMT

ஒட்டன்சத்திரம் நாகனம்பட்டி சாலையில் உள்ள கே.கே. நகரில் வேளாண் விளைபொருள் உற்பத்தி கூட்டுறவு விற்பனை சங்க திறப்பு விழா நடந்தது. விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு சங்கத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வேலுச்சாமி எம்.பி., கூட்டுறவு சங்க தலைவர் ராஜாமணி, துணை தலைவர் ஜோதீஸ்வரன், நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட அவை தலைவர் மோகன், செயற்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜ், சுப்பிரமணி, தங்கராஜ், ஒன்றிய குழுத்தலைவர்கள் அய்யம்மாள், சத்தியபுவனா, பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் காந்திநாதன், செயலாளர் பசுபதி மற்றும் ஊராட்சி தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்