கோழிக்குஞ்சு பொரிப்பகம் திறப்பு விழா

நாகை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கோழிக்குஞ்சு பொரிப்பகம் திறப்பு விழா நடந்தது.

Update: 2022-09-30 18:45 GMT

வெளிப்பாளையம்:

நாகை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் கோழிக்குஞ்சு பொரிப்பகம் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவிராஜ் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக விரிவாக்க இயக்குனர் சுதீப்குமார் கோழிக்குஞ்சு பொரிப்பகத்தை திறந்து வைத்து பேசுகையில் இந்த பொரிப்பகத்தில் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கோழிப் பண்ணையாளர்கள் முட்டைகளை வைத்து குஞ்சு பொரித்து கொள்ளலாம் என்றார். பின்னர் கோழிக் குஞ்சு வளர்ப்பு குறித்து பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய டாக்டர் சுரேஷ், நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஸ்வந்த் கண்ணா ஆகியோர் பேசினர். இதில் உதவி இயக்குனர்கள் அசீம் இப்ராஹிம், விஜயகுமார், டாக்டர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்