கோவில்பட்டியில் புதிய நகைக்கடை திறப்பு விழா

கோவில்பட்டியில் புதிய நகைக்கடை திறப்பு விழா நடந்தது.

Update: 2023-01-27 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் தெருவில் அம்பிகா தங்கம் மற்றும் வெள்ளி நகைக்கடை திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கடை அதிபர் வி.பி.மீனாட்சி சுந்தரேஸ்வரன் தலைமை தாங்கினார். கடை அதிபர்கள் வி.பி. சோமசுந்தரம், வி.பி.எஸ்.மாரியப்பன், வி.பி.எம்.மாரியப்பன் ஆகியோர் வரவேற்றனர். முதல் விற்பனையை கடை அதிபர் வி.பி.மீனாட்சி சுந்தரேஸ்வரனிடம் பஸ் அதிபர் ராஜகோபால் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., நகராட்சி தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான கா.கருணாநிதி, முன்னாள் அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன், பா.ஜ.க. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன், தொழிலதிபர் அங்கு முத்து, நகைக் கடை அதிபர் வி.எஸ்.பாபு மற்றும் தொழிலதிபர்கள், நகைக்கடை அதிபர்கள் கலந்துகொண்டனர். திறப்பு விழாவை முன்னிட்டு 10 நாட்களுக்கு சிறப்பு சலுகையாக தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.100 தள்ளுபடியும், வெள்ளி ஆபரணங்களுக்கு கூலி, சேதாரம் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாகவும் நகைக்கடை அதிபர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்