ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்க விழா

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்க விழா நடந்தது.

Update: 2022-05-24 15:30 GMT

தர்மபுரி:

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்க விழா நடந்தது.

பாலக்கோடு

பாலக்கோடு வேளாண்மைதுறை சார்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை காணொலி காட்சி மூலமாக சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரெட்டியூர் சமுதாய திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு மண்புழு உரம், தென்னங்கன்று, பல வகை செடிகள், விதைகள், தெளிப்பான் உள்ளிட்ட விவசாய உபகரணகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் முருகன், உதவி தோட்டக்கலை அலுவலர் கோபாலகிருஷ்ணன், பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அனிதா, உதவி வேளாண்மை அலுவலர் செல்வம், வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி, முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம், ஊராட்சி உறுப்பினர் அழகுசிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடத்தூர்

கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் தென்கரைக்கோட்டை ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்ட முகாம் நடந்தது. இதில் பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் விஜயா சங்கர், துணை வேளாண் அலுவலர் கோவிந்தராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகர், வேளாண் உதவி அலுவலர் அருள்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

முகாமில் ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தோட்டக்கலை ஆய்வாளர் சுகன்யா, வருவாய் ஆய்வாளர் வெண்மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் சித்ரா செந்தில்குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் சென்றிலா சிலுவைநாதன், சுகாதார ஆய்வாளர்கள் சிவலிங்கம், இளந்திரையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 75 பேருக்கு தென்னங்கன்று, செடி வகைகள், தானிய வகைகள், மண்புழு உரங்கள் உள்ளிட்ட விவசாய இடுபொருட்கள் வழங்கப்பட்டன.

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரம் பொம்மிடியில் வேளாண்மை துறை சார்பில் 36 பேருக்கும், தோட்டக்கலை துறை சார்பில் 57 பேருக்கும் என 93 பேருக்கு தென்னங்கன்று, பழசெடிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் அமரவேல், வேளாண்மை துணை இயக்குநர்கள் சங்கர், தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆனந்த், துணை வேளாண்மை அலுவலர் உதயகுமார், உதவி பொறியாளர் வேலுச்சாமி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காரிமங்கலம்

காரிமங்கலம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் தொடங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. அன்பழகன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருட்கள் வழங்கினார். இதுதவிர காரிமங்கலம் வட்டாரத்தில் உள்ள அடிலம், பந்தாரஅள்ளி, திண்டல் இண்டமங்கலம், பெரியாம்பட்டி, பைசுஅள்ளி, பிக்கனஅள்ளி, ஜிட்டானஅள்ளி, ஜக்கசமுத்திரம் ஆகிய 9 ஊராட்சிகளிலும் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.

வேளாண்மைத்துறை சார்பாக 675 பேருக்கு தென்னங்கன்றுகளும், 135 பேருக்கு வரப்பு பயிர்- காரமணி விதைகளும், 45 பேருக்கு கைத்தெளிப்பான்களும், 18 பேருக்கு பயிர் ஊக்க தொகையும், 18 பேருக்கு பிளாஸ்டிக் டிரம்கள், நெகிலி கூடைகளும், 270 பருக்கு வீட்டு காய்கறி தோட்ட விதைகளும் வழங்கப்பட்டுள்ளன என்று வேளாண்மை உதவி இயக்குனர் புவனேசுவரி தெரிவித்துள்ளார்.ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்க விழா நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்