விளாத்திகுளத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
விளாத்திகுளத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எட்டயபுரம்:
இந்துக்களை இழிவாக பேசிய தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசாவைக் கண்டித்து, விளாத்திகுளத்தில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அங்குள்ள பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விளாத்திகுளம் இந்து முன்னணி ஒன்றிய தலைவர் சிவசுப்பையா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆ.ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.