விளாத்திகுளத்தில்மின்சார சிக்கன வாரவிழா

விளாத்திகுளத்தில் மின்சார சிக்கன வாரவிழா நடந்தது.

Update: 2022-12-22 18:45 GMT

விளாத்திகுளம்:

விளாத்திகுளத்தில் மின்சார சிக்கன வார விழா ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மின் செயற்பொறியாளர் முத்துராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மின் சிக்கனம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் பேசினா். மழைக்காலங்களில் மின்சாரத்தை எப்படி கையாள்வது? என்பது குறித்து மின் செயற்பொறியாளர் முத்துராஜ் பேசினார். கூட்டத்தில் விளாத்திகுளம் மின்பொறியாளர், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்