விளாத்திகுளம் பகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்

விளாத்திகுளம் பகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்

Update: 2022-09-08 10:53 GMT

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. எனவே, விளாத்திகுளம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன்பொம்மையாபுரம், ராமச்சந்திராபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும்,

குளத்தூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட கீழவைப்பார், வைப்பார், வேப்பலோடை, குளத்தூர், மார்த்தாண்டம்பட்டி, முள்ளூர் ஆகிய பகுதிகளிலும், சூரங்குடி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) சந்திரன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்