வெள்ளித்திருப்பூரில் கிணற்றில் தவறி விழுந்து பெண் என்ஜினீயர் சாவு

பெண் என்ஜினீயர்

Update: 2022-11-09 20:18 GMT

வெள்ளித்திருப்பூரில் கிணற்றில் தவறி விழுந்து பெண் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.

பெண் என்ஜினீயர்

அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூர் குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. அவருடைய மகள் கோகுல பிரியா (வயது 25). பி.இ. பட்டதாரி. இவர் நேற்று காலை 9 மணி அளவில் அருகே உள்ள அவரது கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க மின்மோட்டாரை இயக்கச் சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கால் தவறி 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டார். கிணற்றில் 50 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்தது. இதனால் தண்ணீரில் தத்தளித்தபடி கோகுலபிரியா சத்தம் போட்டார்.

சாவு

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். பின்னர் இதுபற்றி அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கிணற்றில் இறங்கி கோகுலபிரியாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்துக்கு பிறகு கோகுலபிரியா பிணமாக மீட்கப்பட்டார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கோகுலபிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்