வீரபாண்டியில்அரசு ஊழியர் சங்க கூட்டம்
தேனி அருகே வீரபாண்டியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம் நேற்று நடைபெற்றது.
தேனி அருகே வீரபாண்டியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சின்னச்சாமி வரவேற்றார். இந்த கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். ஓய்வூதிய திட்டம் குறித்து 3 மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்த வேண்டும். சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக மாதம் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.