வீரபாண்டியில் சுதந்திர தினத்தையொட்டி பொதுவிருந்து

சுதந்திர தினத்தையொட்டி வீரபாண்டியில் பொதுவிருந்து நடந்தது

Update: 2022-08-15 19:11 GMT

வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோவிலில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழாவையொட்டி பொது விருந்து நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்கினார். பின்னர் அவர் பொதுமக்களுடன் அமர்ந்து விருந்து சாப்பிட்டார். நிகழ்ச்சியில் தேனி போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, பேரூராட்சி செயலாளர் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் கலைவாணர், கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து, மேலாளர் பாலசுப்பிரமணியம், கனக்காளர் பழனியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்