உமரிக்காடு பஞ்சாயத்தில்ஆதார் திருத்த சிறப்பு முகாம்

உமரிக்காடு பஞ்சாயத்தில் ஆதார் திருத்த சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2023-01-20 18:45 GMT

ஏரல்:

ஏரல் அருகே உள்ள உமரிக்காடு பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆதார் கார்டு திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமை பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் ஆதார் கார்டில் தவறுதலாக உள்ள பிறந்த தேதி, முகவரி மற்றும் பெயர் மாற்றம் உள்பட அனைத்தும் திருத்தம் செய்யபடும். முகாமில் உரிய ஆவணத்தை கொடுத்து திருத்தம் செய்து கொள்ளலாம். இந்த முகாம் வருகிற 28-ந் தேதி வரை நடைபெறும் என பஞ்சாயத்து தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்