தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-09-04 15:39 GMT

தூத்துக்குடி போல்டன்புரத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 21). இவர், தனது நண்பர் அண்ணாநகர் 4-வது தெருவை சேர்ந்த சிவசக்தி (21) என்பவருடன் தூத்துக்குடி ரோச் பூங்கா அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தாராம். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் அந்த பகுதியில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த தமிழ்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சிவசக்தி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்