தூத்துக்குடியில் இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-25 18:45 GMT

தூத்துக்குடியில் இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை தூத்துக்குடி தபால் தந்தி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் அகமது இக்பால் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலை கழக மாநில பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட பொருளாளர் முகமது ஜான், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொருளாளர் அஸ்ரப் அலி பைஜி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் அப்துல்காதர், காங்கிரஸ் மாநில பேச்சாளர் அப்துல் மஜித் ஆகியோர் பேசினர்.

கோரிக்கை

ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் மற்றும் தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை சோதனை மற்றும் அதன் தலைவர்களின் கைதை கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி காதர் மைதீன் மற்றும் இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்