தூத்துக்குடியில்கடல் சீற்றம் ஏற்பட்ட பகுதியில் கனிமொழி எம்.பி. ஆய்வு

தூத்துக்குடியில் கடல் சீற்றம் ஏற்பட்ட பகுதியில் கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார்.

Update: 2023-04-20 18:45 GMT

தூத்துக்குடியில் கடல் சீற்றம் ஏற்பட்ட பகுதிகளில் கனிமொழி எம்.பி. வியாழக்கிழமை காலையில் ஆய்வு செய்தார்.

கடல் சீற்றம்

தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகர் ராஜாபாளையம், சிலுவைப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் கடல் நீர் சுமார் 60 அடி தூரத்துக்கு கரையை கடந்து வந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஆலயம், மீன் ஏலக்கூடத்தை கடல்நீர் சூழ்ந்தது. 3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் அதிக அளவில் கடல்நீர் வெளியில் வந்து இருப்பதாக கூறப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆய்வு

இதனை அறிந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணை பொதுச் செயலாளருமான கனிமொழி நேற்று தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகர் ராஜபாளையம் பகுதிக்கு சென்றார்.

அங்கு கடல் நீர் உட்புகுந்த பகுதிகளை பார்வையிட்டார். அதற்கான காரணங்களையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். எதிர்காலத்தில் இதனால் பேரிடர் வாய்ப்பு உள்ளதா? என்பதை ஆய்வு செய்து, தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறும் அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

கலந்து கொண்டவர்கள்

ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், தாசில்தார் செல்வக்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்