தூத்துக்குடியில்லாரி மோதி மின்வாரிய ஊழியர் சாவு

தூத்துக்குடியில் லாரி மோதி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்து போனார்.

Update: 2023-05-02 18:45 GMT

கோவில்பட்டி சுபாநகரை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 53). இவர் தூத்துக்குடி மின்சார வாரியத்தில் போர்மேனாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மதியம் சண்முகநாதன் மோட்டார் சைக்கிளில் மதுரை நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தார். அவர் அந்த பகுதியில் உள்ள லாரி புக்கிங் ஆபீஸ் அருகே சென்ற போது, பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்