தூத்துக்குடியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-19 18:45 GMT

தூத்துக்குடி அண்ணா நகர் டி.எம்.பி காலனி மெயின் ரோட்டில் பழுதடைந்த நிலையில் இருக்கும் டிரான்ஸ்பார்மரை மாற்றவேண்டும் என்று பா. ஜனதா கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் டிரான்ஸ்பார்மரை மாற்றுவதற்கு பதிலாக, உடைந்த பகுதிகளை லெப்பம் வைத்து ஒட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை உடனடியாக மாற்றக்கோரியும் பா.ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் அக்கட்சியினர் டி.எம்.பி.காலனியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதையெடுத்து போலீசார் மற்றும் மின்சாரவாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் 15 நாட்களில் டிரான்ஸ்பார்மரை மாற்றி விடுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்றுக் கொண்ட பா.ஜ.கவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்