தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-26 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜெபராணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் கலாவதி, பாப்பா, மாவட்ட இணைச்செயலாளர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சந்திரா கோரிக்கைகளை விளக்கி பேசினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட குழு உறுப்பினர் இல.ராமமூர்த்தி வாழ்த்தி பேசினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரசல் நிறைவுரையாற்றினார்.

சிலிண்டருக்கான முழுத் தொகையை வழங்க வேண்டும். இல்லையென்றால் வருடத்துக்கு 4 சிலிண்டர்களை அரசே ஏற்று வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு முன்பு உள்ளூர் இடம் மாறுதல் மற்றும் மாவட்ட இடமாறுதல் உடனடியாக வழங்க வேண்டும், 3 ஆண்டுகள் பணி முடித்த மினி அங்கன்வாடி ஊழியர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும், 5 ஆண்டு பணி முடித்த உதவியாளர்களுக்கு நிபந்தனை இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும், உணவு செலவுகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

-----

Tags:    

மேலும் செய்திகள்