தூத்துக்குடியில் பெண்ணிடம் செல்போன் பறித்த 2வாலிபர்கள் கைது

தூத்துக்குடியில் பெண்ணிடம் செல்போன் பறித்த 2வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-02 18:45 GMT

தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒரு பெண் தூத்துக்குடி மணிநகர் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் அந்த பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி கே.வி.கே நகரைச் சேர்ந்த கணேசன் மகன் அருள் முத்துமணி (24), தூத்துக்குடி சக்திவிநாயகபுரத்தை சேர்ந்த இருளப்பன் மகன் மணிகண்டன் (27) ஆகிய 2 பேரும் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. உடனடியாக போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போனையும் மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்