தூத்துக்குடியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்:அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியில் நேற்று தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் உரிமைத் திட்ட தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமை தாங்கினார். மேயர் ஜெகன் பெரியசாமி, ஜீ.வி.மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான வங்கி ஏ.டி.எம். கார்டுகளை பெண்களுக்கு வழங்கி பேசினார்.
இந்த விழாவில் மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், தூத்துக்குடி உதவி கலெக்டர்கள் கவுரவ்குமார், ஜேன் கிறிஷ்டி பாய், தூத்துக்குடி தாசில்தார் பிரபாகரன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.