தூத்துக்குடி மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டப்பட்டது.

Update: 2022-10-31 18:45 GMT

எட்டயபுரம்:

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

தேவர் ஜெயந்தி விழா

எட்டயபுரத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ ஆலோசனையின்படி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் எட்டயபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் ராஜ்குமார் தலைமையில் தேவர் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தில் உள்ள தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் அ.தி.மு.க தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இயக்க நிறுவனத் தலைவர் வெயிலுமுத்து பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஆரி பாண்டியன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக கோவில்பட்டி நகரசபை தலைவர் கருணாநிதி, அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில இளைஞரணி தலைவர் சுரேஷ் தேவர், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தையல் எந்திரங்கள், தேய்ப்பு எந்திரங்கள், 250 பெண்களுக்கு சேலை வழங்கி, அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவைகுண்டம்

ேதவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் பஸ்நிலையம் அருகே புதுப்பிக்கப்பட்ட தேவர் சிலைக்கு தூத்துக்குடி அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அ.தி.மு.க. தெற்கு மாவட்ட அவைத்தலைவர ்திருப்பாற்கடல், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், தக்கார் சுப்பையா, வெள்ளூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்தையா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் கருப்பசாமி, நகர செயலாளர் காசிராஜன், விவசாய அணி சொர்ண பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

ஆறுமுகநேரி- நாசரேத்

ஆறுமுகநேரி பெருமாள்புரத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் அணி சார்பில் தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றது. ஊர் தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். வீரபாண்டியன் முன்னிலை வகித்தார். சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது. விழாவில் நிர்வாகிகள் பாலமுருகன், ரமேஷ், முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தேவா் ஜெயந்தியை முன்னிட்டு நாசரேத் அ.தி.மு.க சாா்பில் வெள்ளரிக்காயூரணியிலுள்ள தேவா் சிலைக்கு நகர செயலாளா் கிங்சிலி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நகர அவைத்தலைவா் சிவசுப்பு உட்பட பலர் கலந்து கொண்டனா்.

சாத்தான்குளம்

சாத்தான்குளம் பழைய பஸ் நிலையத்தில் பசும்பொன் ஸ்போர்ட்ஸ் கிளப், நகர தேவர் பேரவை இளைஞர் அணி சார்பில் பசும்பொன் முத்தராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் கணபதி தலைமை தாங்கினார். கரையடி சுடலைமாட சுவாமி கோவில் தர்மகர்த்தா முருகன், ஸ்ரீவண்டிமலைச்சி சமேத வண்டி மலையான் கோவில் தர்மகர்த்தா ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 25 மாணவ -மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களை ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கணபதி, குப்பு ஆகியோர் வழங்கினர். இதில் பார்வார்டு பிளாக் ஒன்றிய தலைவர் ஜி.முருகன், ஒன்றிய செயலாளர் ஏ.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம் ஒன்றிய, நகர பா.ஜனதா சார்பில் மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ், ஒன்றிய தலைவர் சரவணன், நகரத் தலைவர் ஜோசப்ஜெபராஜ், ஆகியோர் தலைமையில் தேவர் உருவபடத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சாத்தான்குளம் நகர அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் குமரகுருபரன் தலைமையில் தேவர் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்