திருச்செந்தூரில்விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம்

திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-04-09 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் தனியார் மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொது செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட மேலிட பொறுப்பாளருமான கலைவேந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில், டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 14-ந் தேதி திருச்செந்தூர் தெப்பக்குளத்தில் இருந்து ஜனநாயம் காப்போம் பேரணியை யூனியன் அலுவலகம் எதிர்புறம் உள்ள திடல் வரை நடத்துவது, திருச்செந்தூர் நகரை தலைமை இடமாகக் கொண்டு தனி வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும். திருச்செந்தூர் அம்பேத்கர் நினைவு பூங்காவில் டாக்டர் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலை அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தியல் பரப்பு அணி மாநில பொறுப்பாளர் தமிழ் குட்டி, முற்போக்கு மாணவர் கழகம் தர்மராஜ், மாவட்ட பொருளாளர் பாரி வள்ளல், மாவட்ட துணை செயலாளர் இந்திராதிருச்செந்தூர் நகர பொருளாளர் சரண்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்