திருச்செந்தூர் கோவிலில்நடிகர்ரஜினிகாந்த் மகள்சவுந்தர்யாகுடும்பத்துடன் சாமி தரிசனம்
திருச்செந்தூர் கோவிலில் வியாழக்கிழமை நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா நேற்று தனது கணவர் விசாகன் மற்றும் மகனுடன் வந்து சாமி தரிசனம் செய்தார். கோவிலில் மூலவர், சண்முகர், சூரசம்ஹாரமூர்த்தி, பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டனர். கோவில் யானை தெய்வானைக்கு கரும்பு பிரசாதமாக வழங்கியும் ஆசீர்வாதம் பெற்றனர்.