தொப்பம்பட்டி அரசு பள்ளியில்பொங்கல் விழா கொண்டாட்டம்
தொப்பம்பட்டி அரசு பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாணவ-மாணவிகள் தமிழர்களின் பாராம்பரிய உடை அணிந்து வந்து பொங்கல் வைத்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் மாவிலை தோரணம் கட்டப்பட்டு, வண்ண, வண்ண கோலமிடப்பட்டது. மேலும் மாணவர்கள் இசைக்கருவி இசைத்து கிராமிய நடனம் ஆடி அசத்தினர். பெண்கள் கும்மியடித்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.