தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில்கால்நடைகளை ரோட்டில் அலையவிட்டால் கடும் நடவடிக்கை:ஆணையாளர் தினேஷ்குமார் எச்சரிக்கை

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கால்நடைகளை ரோட்டில் அலையவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும என்று ஆணையாளர் தினேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-08-11 18:45 GMT

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கால்நடைகளை ரோட்டில் அலைய விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் தினேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கால்நடைகள்

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் போக்கு வரத்துக்கும், பொது மக்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக அலைந்து திரியும் கால்நடைகளை உரிமையாளர்கள் தங்களது சொந்த பொறுப்பில் கொட்டில் அமைத்து பராமரிக்க வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்படி அறிவிப்புகளுக்கு மாறாக கடந்த 5 மாதங்களில் மாநகர பிரதான வீதிகளில் அலைந்து திரிந்த 40 மாடுகள் மாநகராட்சி சார்பாக பிடிக்கப்பட்டு அரசின் அங்கீகாரம் பெற்ற கோசாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. கால்நடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கடும் நடவடிக்கை

இருப்பினும், கால்நடை உரிமை யாளர்கள் மாநகராட்சியின் அறிவிப்பை பொருட்படுத்தாமலும், பொதுமக்களின் நலன் மீது அக்கறை இன்றியும் உள்ளனர். தொடர்ச்சியாக கால்நடைகள் மாநகர பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகின்றன. எனவே கால்நடைகளை தனியாக கொட்டில் அமைத்து முறையாக பராமரிக்க கால்நடை உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடைகள் மாநகராட்சியால் பிடிக்கப்பட்டு நிரந்தரமாக அரசு அங்கீகாரம் பெற்ற கோசாலையில் ஒப்படைக்கப்படும். அந்த கால்நடைகள் திரும்ப வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்