தூத்துக்குடியில்மீனவரை வீடுபுகுந்து கத்தியால் குத்திய வாலிபர் சிக்கினார்

தூத்துக்குடியில்மீனவரை வீடுபுகுந்து கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-06 18:45 GMT


தூத்துக்குடியில் முனிவிரோதத்தில் மீனவரை வீடுபுகுந்து கத்தியால் குத்திய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

மீனவர்

தூத்துக்குடி சிலுவைப்பட்டி சுனாமி காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் முனியராஜ் என்ற அம்பர்லா (வயது 28). மீனவர். இவரும், தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவநாயர் காலனியை சேர்ந்த முனியசாமி மகன் சங்கர் என்ற குட்டியன் (19) என்பவரும் வேம்பார் பகுதியில் மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் முற்றிய நிலையில், சங்கர் தனது சகோதரர் முருகன் (25), நண்பர்கள் ஜெர்மினி, ராஜா ஆகியோருடன் சேர்ந்து முனியராஜ் வீட்டுக்கு சென்று உள்ளார்.

கத்திக்குத்து

அவரது வீட்டுக்குள் புகுந்த 4 பேரும் முனியராஜை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். பின்னர் கத்தியால் முனியராஜை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனராம். இதில் காயம் அடைந்த முனியராஜ் என்ற அம்பர்லா தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்தார். தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை தாளமுத்துநகர் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்